தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு துறைகளில் உள்ள 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. உதவி மேலாளர், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், உதவி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பி.இ., பி.டெக்., கால்நடை மருத்துவப் பட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (அக்., 6) ஆகும்.
டி.என்.பி.எஸ்.சி. 170 பணியிடங்கள்: இன்று கடைசி நாள்
