புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். திருச்சி கிராப்பட்டி டிஇஎல்சி சுடுகாடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக, கிராப்பட்டி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (வயது54)என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தார். அவரிடமிருந்து 50 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பொது கழிப்பிடம் அருகே புகையிலைப் பொருட்களைவிற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது30) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.தில்லைநகர் வாமடம் ரெயில்வே கேட் அருகே பீமநகரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது19) என்பவரை கைது செய்தனர் அவரிடமிருந்து 120 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உறையூர் 80 அடி சாலையில் உள்ள டீ ஸ்டால் அருகே,புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (வயது47) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்
அவரிடமிருந்து 30 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்தனர்.
திருச்சி கொடப்பு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக
குழுமணி அருகே உள்ள பேரூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 27) என்பவரைக் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர் அவரிடமிருந்து 100 கிராம் ஹான்ஸ் பை பறிமுதல் செய்யப்பட்டது மேற்கண்ட வழக்குகளில்கைது செய்யப்பட்ட 5 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மருத்துவ உபகரணங்கள் கடையில் பணம் திருட்டு
திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவுகடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மறுநாள்
கடையைப் திறக்க அருண் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 37 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி மற்றும் 20,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் அருண்புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஆய்வாளர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மயங்கி விழுந்த வாலிபர் சாவு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துகண்டோன்மென்ட் போலீசார் விரைந்து சென்று அந்தநபரை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவபிரகாசம் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் உடல்.. யார் அவர்? போலீசார் விசாரணை
திருச்சி , சத்திரம் பேருந்து நிலையம் லால்குடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று சுமார் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அசைவு இல்லாமல் கிழே கிடந்தார். இதையடுத்து அங்கிருந்த ஜூஸ் கடை ஊழியர் அருண்குமார் அளித்த தகவலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பிறகு மருத்துவக் குழுவினர் பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்துஇறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
