Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடைகளில் புகையிலை விற்பனை? திருச்சியில் போலீஸ் அதிரடி சோதனை

கடைகளில் புகையிலை விற்பனை? திருச்சியில் போலீஸ் அதிரடி சோதனை

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்க காவல் துறையினர் தீவிர அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல் திருச்சி மாநகரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் இன்று போலீசார் பஸ் நிலையம் உள்பட மாநகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.குறிப்பாக திருச்சி மத்திய பஸ் நிலையம்,கன்டோன்மெண்ட்,கலெக்டர் அலுவலக சாலை,நீதிமன்றம்

ஆகிய பகுதிகளில் போலீச இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன்,சக்திவேல் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா,புகையிலை,பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறும்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தடுக்க டீக்கடை,பெட்டிக்கடை,மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.தொடர்ந்து சோதனை நடத்த உள்ளோம்.தடையை மீறி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!