Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறை முடிந்து வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சாா்பில் 300 சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன. இதேப்போல் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயங்கும்.

இதில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேப்போல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!