Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது.  இந்த திடீர் விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாகவும், பலர்  லட்சாதிபதிகளாகவும் உயா்ந்தனர்.

தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என விற்பனை  ஆகி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல்  மாவட்டத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கூலி மற்றும் போக்குவரத்து செலவும் கட்டுப்படியாகவில்லை என அருகில் உள்ள சாலையிலேயே தக்காளிகளை கொட்டி விட்டு சென்றுள்ளார். தக்காளிகள் சாலையில் கொட்டி கிடப்பதை மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!