Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இல்லத்தரசிகளுக்கு இனிக்கும் செய்தி…..1கிலோ தக்காளி இருபதே ரூபாய் தான்….

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது.  இந்நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 80, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி கிலோ ரூ.90க்கு விற்கப்படும் நிலையில், கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து போட்டிப்போட்டுக்கொண்டு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து கடைக்காரர் நேரடியாக தருவித்து இந்த மலிவான விலையில் விற்றார். ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கினார். ஆனாலும் சிறிது நேரத்தில் தக்காளி விற்று தீர்ந்தது. நாளையும்  தக்காளி வரும். இதே விலைக்கு விற்கப்படும் என கடைக்காரர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!