Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா..மக்கள் கண்டு ரசித்தனர்.

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா’: அரிய வகை விதைகள் மற்றும் மூலிகைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

மாறி வரும் நவீன யுகத்தில், மண் சார்ந்த மரபு விதைகள் குறித்த அறியாமையும் விழிப்புணர்வு இன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்றைய இளைய சமூகத்திடம் அது குறித்த

விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரியலூரில் நடைபெற்ற பாரம்பரிய மரபு விதை திருவிழாவை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இயற்கை அளித்துள்ள மிகப்பெரிய கொடைகளில் விதைகளும் ஒன்று. உழவுத் தொழிலுக்கு மட்டுமல்லாது, மனிதனின் உணவு தேவைக்கும் அடிப்படையாக விளங்குவது விதைகள் மட்டுமே.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மரபு விதை திருவிழாவில், அழிந்து வரும் பல்வேறு வகையான தானிய விதைகள் மற்றும் மூலிகை செடிகளை காட்சி படுத்தியிருந்தனர். மேலும்

தானியங்களை கொண்டு செய்யப்பட்ட உணவுப் பொருட்களும், மூலிகை சாறுகளும் பொதுமக்கள் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இயற்கை குறித்த புத்தகங்களும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியை காப்பாற்றும் விதமாக துணிப்பை விற்பனையும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் பெரியவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியரும் ஆர்வத்துடன் பங்கேற்று விதைகள் குறித்தும், மூலிகைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் பாரம்பரிய விதைகளை பயிரிட வேண்டும். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

error: Content is protected !!