Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

 ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த மீனவர்களான கணேசன், வசந்த், சஞ்சய் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏர்வாடியில் இருந்து மாயாகுளத்திற்கு நேற்று மாலை சென்றனர். இதையடுத்து புல்லந்தை அருகே தச்சு ஊருணி ஆபத்தான வளைவில் திரும்பியபோது, ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி சென்ற கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வசந்த், சஞ்சய் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்றிரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காரில் பயணித்த 4 பேரில் முதுகுளத்தூரைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் லேசான காயமடைந்தார். தச்சு ஊருணி விலக்கில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!