Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

திருச்சியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் எஸ். ஜோசப் செல்வராஜ். இவர் வரவிருக்கும் தேர்தலுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலராக (Polling Officer) நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கான பயிற்சி வகுப்பு இன்று ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக பேராசிரியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!