ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தனது விருப்பத்திற்கு மாறாக காதலனுடன் திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு சென்ற மகளை ஏற்க முடியாமல் தாய் கோசலை (45) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் பிரதீவ்ராஜ் அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக மகள் திவ்யா மற்றும் அவரது காதலன் கதிர்வேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
