Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் பாய்ந்து பெண் உட்பட 2 குழந்தைகள் பலி – பெரும் சோகம்!

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி வள்ளி (23). இந்த தம்பதிக்கு பரத் (7), சந்தோஷ் (3) என இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கணவர் உயிரிழந்த பின்னர், வள்ளி தனது இரு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) காலை சுமார் 9 மணியளவில் அரக்கோணம் – திருத்தணி ரயில் மார்க்கத்தில் உள்ள மங்கம்மாபேட்டை பகுதியில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு வள்ளி தனது இரு மகன்களுடன் பாய்ந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் வள்ளி மற்றும் அவரது இரு மகன்களான பரத், சந்தோஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளி குடும்ப வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரை இழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த தாய் தனது மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!