காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ராயல் என்பீல்டு பைக்கில் சென்ற ரவிசங்கர், மகள் சௌந்தர்யா மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இதில் பைக் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில், லாரி சக்கரத்தில் சிக்கிய தந்தை, மகள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இக்கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கோர விபத்து-தந்தை, மகள் பரிதாப பலி
