Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சியினர் செயல்பாடுகளில் விஜய் தனிக் கவனம் செலுத்த வேண்டும்

கட்சியினர் செயல்பாடுகளில் விஜய் தனிக் கவனம் செலுத்த வேண்டும்

முதலமைச்சர் விஜய் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வழியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா அவர்களுக்கு த வெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அவர்கள் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது… பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும்.. அவர்கள் மீது பார்வை என்பது தவறான கண்ணோட்டத்தோடு சிலரால் அணுகப்படுகிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது… இத்தகைய கண்ணோட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.. இதில் உண்மை இருந்தால் உடனே யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.. கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய் அவர்கள் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்… இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.. மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் நிச்சயமாக அப்படி நடக்கவில்லை என்கிறார்… எது உண்மை என்பது வெளிக்கொணரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!