Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் தொடர் போராட்டம்!

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் சங்கம் சார்பாக 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பனிமலை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய சங்கத் தலைவர் சிங்கராயன் தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகைகள் உடனடியாக வழங்க வேண்டும், 1-4-2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் அரசே இயக்க வேண்டும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு கால பணன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!