தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாகத் திகழ்ந்த நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்த திரைப்படப் பயணம் நிறைவடைந்துள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு இடையே இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சிக் குறிப்பைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன், லியோ, பீஸ்ட், மாஸ்டர் மற்றும் கத்தி ஆகிய படங்கள் வழியாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது. என் மீது அளவற்ற நம்பிக்கையையும், என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும் அளித்த விஜய் சாருக்கு மனமார்ந்த நன்றி. அந்த இசை என்றென்றும் வாழும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
