திருச்சி, பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் மதுமிதா வயது (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 4 பாடங்களில் பெயிலானதாக கூறப்படுகிறது .இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மதுமிதா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…
