திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஶ்ரீரங்கம் அல்லூர் மேலதெரு பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (41) என்பவரை பெட்டவாய்த்தலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முசிறி கீழ சந்தபாளையம் மேல தெரு பகுதியை சேர்ந்த நல்லேந்திரன் ( 56) முசிறி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதேபோன்று முசிறி பேரூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கோமதி ( 40) என்ற பெண்மணியை ஜம்புநாதபுரம் போலீசாரும், முசிறி டி.டி.பெட் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 72) என்பவரை துறையூர் போலீசாரும், மருங்காபுரி வேம்பனூர் பகுதியை சேர்ந்த பொன்னன் (57) என்பவரை வளநாடு போலீசாரும் குட்கா விற்ற வழக்கில் கைது செய்தனர்.
