Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அந்த  விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதனை நடத்தி்னர்.  அப்போது  சந்தேகத்திற்கு இடமான ஒரு  ஆண் பயணியை தனியே அழைத்து சென்று சோதனை போட்டபோது அவர் ஜீன்ஸ் பேண்ட்டின் உள்பக்கம் முழுவதும் தங்க முலாம் பூசியிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கத்தை உருக்கி அதனை   பேண்டின் உள்பக்கம்  ஸ்பிரே மூலம் தங்க முலாம் பூசி அந்த பேண்டை அணிந்து  வந்துள்ளார். அதையும்  அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பயணியின் பேண்டில் பூசப்பட்டு இருந்த தங்கத்தை சுரண்டி எடுத்து விட்டனர்.  அதில் 390 கிராம் தங்கம் இருந்தது. இது 24 காரட் தங்கம். இதன் மதிப்பு ரூ.24. 96 லட்சம். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி்னர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!