Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு…

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சி சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , திருச்சி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர்

சிவரஞ்சனி ஆகிேயார் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய ,உதவி பொறியாளர் கிருஷ்ண பிரசாத், கோயில் மேலாளர் தமிழ்செல்வி, உதவி செயற்பொறியாளர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர், முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!