Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பாரதிதாசன் பல்கலை., கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை….

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அனுசுயா தலைமையில் போலி ஒத்திகை பயிற்சி நடை பெற்றது. இந்த பயிற்சியில் வீடுகளில் ஏற்படும் தீயை எவ்வாறு

எளிதாக அனைப்பது,பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட்டு பொதுமக்களை காப்பது, வீட்டில் டீ ஏற்பட்டு முழுவதும் பரவிய பிறகு வீட்டின் மேல் தளத்தில் உள்ளவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது ,கருவிகளை கையாளுவது, காயம் ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது குறித்த கல்லூரி மாணவர்களிடையே பயிற்சி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!