பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, தென்னூர், அந்தநல்லூர் தெற்கு, திருவெறும்பூர் வடக்கு உள்ளிட்ட மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கே. ஒண்டிமுத்து புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கண்டோன்மென்ட் மண்டல துணை தலைவர்களாக கமலா, தேவிகா, முத்துக்கண்ணன், மணிகண்டன், சிவாஜி, பொதுச் செயலாளர் களாக நாகராஜ், ரெங்கநாதன், செயலாளர்களாக ராம நாராயணன், முத்துவேல், சசிகுமார், வீராசாமி, கண்மணி, பொருளாளராக நாகராஜன் ஆகியோரும், ஸ்ரீரங்கம் மண்டல துணைத் தலைவர்களாக கார்த்திகேயன், சரவணன், பன்னீர்செல்வம், கல்யாணி, முரளி, பொதுச் செயலாளராக ராமச்சந்திரன், சந்திரசேகர், செயலாளர்களாக ராஜசேகர்,சிதம்பரம், பிரவீன், ஸ்ரீபிரியா, பொருளாளராக பெரியசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்..
மலைக்கோட்டை மண்டல துணைத் தலைவர்களாக மாரிக்கண்ணு, சுப்பிரமணி, மேகலா, கார்த்திகேயன், பாலமுருகன், பொதுச் செயலாளர்களாக சதீஷ், பி.சதீஷ்குமார், செயலாளர்களாக பிரபு, செல்வி, சாம்ராஜ், அன்புமணி, பொருளாளராக பரத் மற்றும், தென்னூர் மண்டல துணை தலைவர்களாக ஸ்ரீதர், பாண்டி மீனா, பிரபு, புவனேஸ்வரி, பாண்டியன், பொதுச் செயலாளர்களாக சந்திரசேகர்,செல்வராஜ், செயலாளர்களாக செந்தில்குமார், கணேஷ், பாலச்சந்தர், மணி, பொருளாளராக சந்தோஷ் சிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தநல்லூர் தெற்கு மண்டல துணைத் தலைவர்களாக கணேசன், கோபிநாத், அண்ணரசு, ஜெயலலிதா, பொதுச் செயலாளராக பாலகுமார், செயலாளர்களாக வைரன், ராதாகிருஷ்ணன், சசிகுமார், ராவேந்திரன், பொருளாளராக பொன்னுச்சாமி ஆகியோரும், திருவெறும்பூர் வடக்கு மண்டல துணை தலைவர்களாக பாலமுரளி, நாக சரவணன், மகேஸ்வரி, சுஜாதா சிவசாமி, பொதுச் செயலாளர்களாக கார்த்திக், முத்தையன், செயலாளர்களாக பாரதிராஜா பாலசுப்பிரமணியன், செல்வகுமார், ஷேரோன் ஜெனிபர், பொருளாளராக ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நிர்வாகிகளுக்கு கட்சி தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்டத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
