Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.   இது குறித்து  ஜெயகர்ணா, உறையூர் காவல்நிலையத்தில்  உடனடியாக புகார் அளித்தார்.  இன்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடமும் இது தொடர்பாக புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து  முகமது அஸ்ரப் என்ற நபர் போனில் ஜெயகர்ணாவுடன் பேசியது உண்மைதானா, எடுத்தவுடன் கொலை மிரட்டல் விடுத்தாரா அல்லது  அவர்களுக்குள் வேறு ஏதாவது பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதா, எந்த நம்பரில் இருந்து அவர் பேசினார் , இதன் உண்மைத்தன்மை என்ன என போலீசார் விசாரிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!