திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் பகுதியில் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சிக்னலை வேகமாக கடக்க முயன்றது. அதற்குள்ளாக ரெட் சிக்னல் விழுந்ததால் காரின் வேகத்தை குறைக்க முடியாமல் டிரைவர் சீனிவாசன் முன்புறம் திடீரென நின்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பென்ஸ் காரின் முன்புறம் சேதமடைந்தது. 
