திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
