Skip to content

வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்

எடமலைப்பட்டி புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது திருச்சி பிப்ரவரி 15 திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அன்பிலார் நகரை சேர்ந்தஅஷ்ரப் அலி என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அஷ்ரப் அலியை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

காந்தி மார்க்கெட்டில்

கட்டிடத்தில் இருந்த வயர்கள் திருட்டு

வாலிபர் கைது திருச்சி பிப்ரவரி 15 திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகில் புதிதாக ஒரு வீடு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயரை வருமா சாமி ஒருவன் தேடிச் சென்று விட்டான் நீ தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் யாசர் அரபத் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரகனேரி முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் வயது 21 என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து எலக்ட்ரிக்கல் வயரை பறிமுதல் செய்துள்ளனர்.

பாலக்கரையில்

இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 38 )இவர் தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் காலை பார்த்த பொழுது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் இருசக்கர வாகனத்துடன் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார் .
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கோவை மாவட்டம் சாய்பாபா நகரை சேர்ந்த சந்தோஷ் (வயது 24 )என்பதும் இவர்ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது அந்த இருசக்கர வாகனம் ஆரோக்கியதாஸ் யிடம் திருடி வந்தது என தெரிய வந்தது.
இதையடுத்துபாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷத்தை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!