Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

தோசை சுட்டு வாக்கு சேகரித்த, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பருப்புகார தெரு, உடையான் தோட்டம், பாலக்கரை பஜார், நந்தவனம், கெம்ஸ் டவுன் ஆகிய பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து, அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையோர தள்ளுவண்டி உணவகத்தில் தோசை சுட்டு நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த பிரச்சாரத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!