Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

திருச்சி உறையூரில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (26)என்கிற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை தேடி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ராமராஜ் அவரது சகோதரர் சிவா மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து செங்குட்டு வேல் என்கிற நபரை கடந்த சில மாதங்களுக்கு  முன் கொலை செய்ததும் அவர் நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் செங்குட்டுவேலின்கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக ராமராஜனை கொலை செய்ததாக தெரிய வந்தது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கி இருந்த 4 தனிப்படை போலீசார் நேற்று மாலை பெரம்பலூர்  சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயராஜ் ( 33) பிரகாஷ்( 36) மற்றும் புதுக்காலனியை சேர்ந்த ராஜ் (32) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!