Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் எல்ஐசி ஏஜென்ட் வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு…

திருச்சி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52) இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார், சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 13ந் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பொன்னுச்சாமி காந்தி மார்க்கெட் குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுச்சாமி வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!