Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது ..

ஐஜி கார்த்திகேயன் பேட்டியில் கூறியதாவது…

திருச்சி மண்டலத்திற்குட்பட்ட காவல் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி செய்து வருபவர்களின் குடும்பத்தார் களுக்கான வேலை வாய்ப்பு முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது – இதில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் :

தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குனர் அறிவுருத்தலின் பேரில் சீருடை பணியாளர்களின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை துவங்கி வைத்துள்ளோம்.

இந்த ஆண்டு மொத்தம் 600 பேர் இந்த முகாமில் கலந்து கொள்கின்றனர் – சுமார் 100 கம்பேனிகள் இங்கு வந்துள்ளனர்.

நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு இதன் வாயிலாக கிடைக்கும் என எதிர்பார்கின்றோம்.

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது – மேலும் பள்ளி கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து
விஜிலென்ஸ் கமிட்டி உருவாக்கி காவல் துறையினர் கண்கானித்து வருகிறார்கள்.

தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை இன்னும் உள்ளது என்கிற கேள்விக்கு ? இதில் தொடர் நடவடிக்கைகள் காவல் துறை எடுத்து வருகிறது – குறிப்பாக குண்டாசில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!