Skip to content
Home » திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

திருச்சியில் ஜெயிலர் பட வெற்றி விழா…தாம்பூல பை வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது.

ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இதனை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன் , நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் பணத்தொகை வழங்கி உள்ளது மேலும் அதில் உழைத்த டெக்னீஷியன்களுக்கு தங்க நாணயம் வழங்கி உள்ளது .

ஜெயிலர் திரைப்படம் வெளியிட்டு ஒரு மாதம் ஆகியும் பல்வேறு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனை கொண்டும் விதமாக திருச்சி ரசிகர்கள் குடும்ப விழாவாக கொண்டாடி வருகின்றனர் இதற்காக இன்று திருச்சி LA மாரிஸ் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தேங்காய் , ஸ்வீட் , வெற்றிலை பாக்கு அடங்கிய தாம்பூல பை அன்பளிப்பாக வழங்கி ஜெயிலர் திரைப்பட வெற்றியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!