திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் பாலாஜி ( 50 ). இவர் காட்டூர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.வழக்கம்போல வியாழக்கிழமை பணிமுடிந்து நிலையத்தை பூட்டிச்சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கேமரா மற்றும் ரொக்கம் ரூ.5000 உள்ளிட்டவைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
அதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோயில் அருகேயுள்ள எழில் நகரில் உள்ள புகைப்பட நிலையத்தில் பூட்டுகளை உடைத்து. அங்கிருந்த கேமரா மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தி திருடிச்சென்றனர். காட்டூர் கைலாஷ் நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டுகளை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.இவை குறித்த தகவல்களின் பேரில் திருவெறும்பூர் போலீஸôர் வழக்குப் பதிந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 20 நாள்களுக்கு முன்பு காட்டூர் சக்தி நகர் பகுதியில் ஒரு ஸ்டூடியோவின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.