சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல வேண்டும். இதனை மீறி மாவட்டத்தில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
