திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட, கோணப்பாதை மற்றும் எரகுடிபகுதிகளில் உள்ள பொதுமக்களின்நீண்ட நாள்கோரிக்கையான தங்கள்பகுதிக்கு புதிய நியாயவிலைகடைவேண்டும் என கூறியதைதொடர்ந்து, துறையூர் சட்டமன்றஉறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று திறந்துவைத்தார், இதனால் எரகுடிபகுதியில் 520 பயனாளிகளும் கோண பாதையில் 350 பயனாளிகளும் பயனடை வார்கள் என வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்,
முதல் விற்பனையை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழுதலைவர் தர்மன்ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முத்துச்செல்வன், அசோகன், முருகூர்ஊராட்சிமன்ற தலைவர் ராஜாத்தி, உப்பிலியபுரம் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ராஜாசரவணன், எம் ஜி பாலசுப்ரமணியன், மற்றும் கிளை செயலாளர்கள் ராமர்,பிரசாத், சங்கர்,வீரமலை கூட்டுறவு சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.