Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து  அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

வீட்டின்  வெளியில்  நிறுத்தியிருந்த  பைக்கை கொளுத்தினர்.  பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்க தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பி ஓடியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பைக் தீயை அணைத்தனர். அதற்குள்  பைக் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.

இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் ஒரு சில நபர்களுக்கும் கோயில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.மேலும் இவர் திமுக பிரமுகர் என்பதால் தேர்தல் வேலை செய்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை .எனவே அவர்கள் தான் செய்திருக்கலாமென புகார் அளித்துள்ளார் .இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து அடித்து நொறுக்கி பைக்கை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!