Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி போலீசார் நடத்தும் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு….

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் போலீஸ் ஸ்டேசன் கடந்த 14.04.1991ம் ஆண்டு ஆரம்பித்து போலீசார் பொதுமக்களின் சேவகர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பொதுமக்களுக்கும் , போலீசாருக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில்  15.04.2023,  அன்று திருச்சி போலீசார் நடத்தும் கபாடி போட்டி (ஆண்) , ஓவிய போட்டி (15 வயதிற்குட்பட்ட ஆண், பெண்), கட்டுரை போட்டி,- போதை பொருளால் ஏற்படும் தீமைகள், போதை பொருளை எவ்வாறு ஒழிப்பது, நான் ஏன் போதை பொருள் பயன்படுத்த மாட்டேன் என்ற தலைப்பில் (அனைத்து வயதினரும்) கலந்து கொள்ளலாம். மேலும் கவிதைப்போட்டி காவல்துறை எங்கள் நண்பன் என்ற தலைப்பில் பங்கேற்கலாம். தொலைபேசி எண்… 9498160147, 9498100668. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராம்ஜி நகர்  இன்ஸ்பெக்டர்  தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் படைப்புகளை வீட்டில் தயார் செய்து வரும் 10.04.2023ம் தேதி மாலை 05.00 மணிக்குள் ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேசனிற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வெற்றியாளர்களுக்கு 16.04.2023 ம் தேதி உயர் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பரிசு வழங்கப்படும். என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!