Skip to content
Home » திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

திருச்சி ஸ்டேஷனில் பராமரிப்பு பணி.. தேஜஸ் உள்பட 5 ரயில்கள் இன்று தாமதமாக புறப்படும்…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மதுரையில் இருந்து தினமும் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22672) இன்று மட்டும் மாலை 4.15 மணிக்கு (75 நிமிடங்கள் தாமதமாக) மதுரையில் இருந்து புறப்படும். மேலும் தஞ்சையில் இருந்து தினமும் மாலை 4.20 மணிக்கு திருச்சிக்கு புறப்பட வேண்டிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (எண்:06683) இன்று மட்டும் மாலை 5.10 மணிக்கு (50 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும். இதுபோல் இன்று மட்டும் திருச்சியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்பட வேண்டிய ரயில் (எண்:06840) 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.15 மணிக்கும், மாலை 5.50 மணிக்கு மயிலாடுதுறை புறப்பட வேண்டிய ரயில் (எண்:06414) 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.30 மணிக்கும், மாலை 6.20 மணிக்கு மன்னார்குடி புறப்பட வேண்டிய ரயில் (எண்:06828) 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.45 மணிக்கும் புறப்படும்.அதுபோல், புதுச்சேரியில் இருந்து மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்படும் ரயில் (எண்: 16861) இன்று மட்டும் தேவையான இடத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!