கடலூர் மாவட்டம், கிளிஞ்சிகுப்பம் பெரிய ராசம் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் கரூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார் . இவர் தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது திருச்சி, முசிறி , துறையூர் சாலையில் கண்ணனூர் கொக்கு வெட்டியான் கோவில் அருகே சென்ற போது ஸ்பீடு பிரேக்கரிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:பெண் பலி