Skip to content
Home » தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

தொழிலதிபரிடம் பண மோசடி செய்த திருச்சி பாஜ.,பெண் பிரமுகர்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் கே. கண்ணன் இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார்.

ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக உத்தரவாதம் கூறி தொழிலதிபர் கண்ணனிடம் கடந்த 15.10.2022, 19.10.2022 ஆகிய தேதிகளில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம்  பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண்ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். கண்ணன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்யவே அங்கு பணமின்றி செக் ரிட்டன் ஆகிவிட்டது. இது குறித்து கண்ணன் திருவெறும்பூர்  போலீஸ் ஸ்டேசனில் அப்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் புகார் செய்துள்ளார்.

சந்திரமோகன் இது பற்றி ரேகாவை நேரில் அழைத்து விசாரித்தார் விரைவில் பணத்தை திருப்பி தருவதாக ரேகா எழுதிக் கொடுத்து சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பணத்தைக் கேட்டு ரேகாவிடம் கண்ணன் போராடி வந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் நேற்று மாலை திருவெறும்பூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இடத்தில் புகார் செய்தார். இப்புகாரில் பண மோசடி செய்து வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டார் பணத்தை கேட்டால் நான் பாஜக பெண் பிரமுகர் என்று என்னை ஆள் வைத்து மிரட்டுகிறார் .ஆகவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

பாஜக பெண் பிரமுகர் மீது கொடுக்கப்பட்ட பண மோசடிபுகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் இது மாதிரி பல்வேறு நபர்களிடம் டைல்ஸ் வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி வருவதும் பணத்தை இழந்த ஒருவர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!