திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர் டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார். இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த ஏஜென்ட் ஒருவரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான கவியரசன் கடந்த 3ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து அவரை திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த கவியரசனின் தந்தை சித்திரச்சேனன் இதுகுறித்து புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….
