திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது இதன் உரிமையாளர்கள் ஸ்டீபன் சையது ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சபரி ராஜன் ( வயது 22) என்பவரை அணுகினர் பின்னர் அவரிடம் துபாயில் நல்ல சம்பளத்தில் எலக்ட்ரீசியன் வேலை இருப்பதாக கூறினர் இதை நம்பிய சபரி ராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமார் விக்னேஷ் குமார் ஆகிய மூன்று பேரும் அந்த ஏஜென்சிக்கு நேரில் சென்று ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை செலுத்தினர்.
அதன் பின்னர் வேலைக்கு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை இன்று நாளை என சுமார் ஓராண்டு காலம் காலம் தாழ்த்தி வந்தனர் இதனால் பாதிக்கப்பட்ட சபரி ராஜன் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் ஸ்டீபன் மற்றும் சையது ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
