Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பூஞ்சோலைப்பட்டியை சேர்ந்த தங்கவேல், தங்கவேல் மனைவி சிவகாமி, தங்கம்மாள், மருதாயி, சூடாமணி ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக தனது விவசாய நிலத்தை அவர்களது நிலம் என்று சொல்லி வீண் பிரச்சனை செய்து வருகிறார்கள்.

என்னுடைய பெயரில் தான் நிலம் உள்ளது. ஏன் என்னிடம் வீண் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் “நீ என்னடி

சொல்லுறது, அது எங்களோட நிலம், மரியாதையா போயிரு, இல்லைனா உன்ன கொன்றுவோம் என்று சொல்லி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், தனது இடத்தில் தன்னை உள்ளே போகக்கூடாது என்று கூறினர். அதை தட்டி கேட்டபோது தன்னை கொடூரமாக அடித்தனர். அதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. மேலும், உயிரோடு விடமாட்டோம், குடும்பத்தையே அழிச்சிருவோம் என்று கொலை முயற்சி செய்து வருகின்றனர். இதனால் நானும், எனது குடும்பமும் மன உளைச்சலோடு வாழ்ந்து வருகிறோம். எனக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்ற நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!