தவெக மகளிர் அணியில் பொறுப்பு வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்சியில் சேர்ந்த இளம் பெண்ணை இன்ஸ்டா வீடியோ கால் மூலம் அழைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வரும் ராணிப்பேட்டை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கடந்த 22ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் மாசாப்பேட்டையை சேர்ந்த 34 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியில் என்னை இணைத்து கொள்வதற்காக, அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எனக்கு கட்சியின் மகளிர் அணி பொறுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், கண்டிப்பாக நம் கட்சி பெண்களுக்கான கட்சி, உங்களுக்கு முன்னுரிமை உண்டு அப்படி என்று கூறினார். ஒரு சில நாட்கள் கழித்து நான் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஏதேனும் விழாக்கள் செய்யும் போது என்னையும் அழையுங்கள் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு அவர், என்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் எனக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தார்.
நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பேசுகின்ற வார்த்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்து கொண்டு இருந்தேன். அப்போது அவர், கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். நான் ‘உனக்கு கட்சியில் பதவி கொடுத்தால் நீ எனக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்’. நான் என்ன கொடுப்பது என்னிடம் எதுவும் இல்லையே என்று கூறினேன். அதற்கு அவர் ஒரு சில ஆசை வார்த்தைகள் கூறி எனக்கு வீடியோ கால் செய் அது போதும் அப்படி என்று கூறினார். அதன் பிறகு இன்ஸ்டா வீடியோ கால் செய்து, ‘அழகாக இருக்கிறாயே உனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஒரு சில வார்த்தைகள் பேசி தொடங்கினார். அப்போது என்னுடைய மார்பகத்தை காமி என்று கூறினார். நான் அதெல்லாம் தவறு என்று கூறி கால் கட் செய்துவிட்டேன். பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, ‘உனக்கு கட்சியில் பதவி வேண்டுமா’ என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர், இது போல் சின்ன விஷயங்களாவது எனக்காக நீ செய்து கொடுத்தால் நான் உனக்கு கட்சியில் பதவி தருகிறேன். நானும் சரி வீடியோ கால் தானே அப்படி என்று காண்பித்து விட்டேன். அதை உடனடியாக அவர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டு அதை வைத்து என் முழு உடலையும் காமி என்று என்னை மிரட்டினார்.
