Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக அரசின் சாதனைகளை- தவெக அரசு மாற்ற முயற்சி..தொ.மு.ச.சண்முகம்

திமுக அரசின் சாதனைகளை- தவெக அரசு மாற்ற முயற்சி..தொ.மு.ச.சண்முகம்

திமுக அரசு செய்த பிரமிக்கத்தக்க வகையிலான சாதனைகளை மாற்றும் முயற்சியில் தான் த.வெ.க அரசு ஈடுபடுகிறது – தொ.மு.ச சண்முகம் குற்றச்சாட்டு

தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திமுக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை த.வெ.க அரசு சீர்குலைக்க கூடாது, தமிழக அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது ஒடுக்கு முறையை ஏவி பழிவாங்கும் போக்கை த
வெ.க அரசு கைவிட வேண்டும், நிதிநிலை அறிக்கை கொள்கை தெளிவற்ற வகையில் வெளியிடப்பட்டு த.வெ.க அரசு புழுதி வாரி தூற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம்,

இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய அரசும் மாநில அரசும் தொடர்ந்து தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவி அவர்களின் உரிமையை பறித்து வருகிறது
அதனை எதிர் கொள்ளும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டால்தான் ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமல்படுத்த முடியும் ஆனால் மூன்று நான்கு மாநிலங்கள் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டுள்ளது மற்ற அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை இருந்த பொழுதும் அதனை செயல்படுத்த துடிக்கிறார்கள் ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை செயல்படுத்தக் கூடாது.

திமுக அரசால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது ஆனால் த.வெ.க அரசு நிதி இல்லை என அந்த திட்டத்தை புறக்கணிக்கிறது இப்படி செய்யாமல் அந்த ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தனியார் மையத்தை புகுத்துகிறார்கள் தனியார் மையம் வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது அரசு துறையாக இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு அனைத்து தரப்பினர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதை விடுத்து தனியார் மையத்தையே செயல்படுத்துகிறார்கள் அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.

திமுக ஆட்சியில் பிரமிக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது அந்த சாதனைகளை மாற்றும் முயற்சியில் தான் த.வெ.க அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் திமுக ஆட்சியிலும் அதை எதிர்த்தோம் தற்போது த.வெ.க ஆட்சியிலும் அதை எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.

error: Content is protected !!