இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தவெக வெற்றிமுகம்- தொண்டர்கள் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டு தொகுதியிலும் ஆளுங்கட்சியான தமிழக

வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளி வருவதற்கு முன்பே தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் திரண்டு வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்

பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்

தொண்டர் ஒருவர் வெடிக்கும் பட்டாசை கையில் வைத்துக் கொண்டே வெடி வெடித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
