Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு அருகே 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே 9ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதர், ஸ்ரீ லட்சுமணன் ஆகிய இரு மாணவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்.28) பள்ளி முடிந்து டியூஷனுக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவர்களைக் காணவில்லை என சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!