காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் திருவிழா தகராறில் சந்திரசேகர், நீலகண்டன் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பகவதி, புஷ்பராஜ், கலையரசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைதான பகவதி, புஷ்பராஜ் ஆகியோர் வழுக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
