நெல்லையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். 16 ஆண்டுகள் அமைதிக்குப் பிறகு, நேற்று முன்தினம் வீரவநல்லூரில் தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்டனர். தெருக்குழாயில் பெண்கள் சண்டையால் துவங்கிய இந்த மோதலில் இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2010-ல் பெருமாள்பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதே கரம்பை பகுதியில், தற்போது காளிமுத்துவை கொலை செய்து அவரது தலையை சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.
