Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார் .அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய உள்ளதால் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் கரூர் செங்கந்தபுரத்திலிருந்து வேலாயுதம்பாளையம் பகுதிக்கு வந்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது ஆவரங்காட்டுபுதூர் பிரிவு அருகே தனது ஸ்கூட்டரை செல்வராஜ் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு திருப்பியபோது கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி அதி வேகமாக வந்த கார் செல்வராஜ் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில்.

இதில் செல்வராஜுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதேபோல் சாந்தாவிற்கு தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டது. அதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாந்தாவை உடனடியாக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மற்றொரு ஆம்புலன்ஸில் செல்வராஜை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார். தற்போது இருசக்கர வாகனத்தின் மீது கார் அதிவேகமாக மோதி 10-அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட டூவீலர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!