Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பேருந்து – பைக் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி, சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார் இருவரின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதி வடமாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!