ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், நேற்று இரவு கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியா பாலத்தை குறிவைத்து உக்ரைன் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், தங்களின் பல்வேறு பகுதிகள் மீது 1,300-க்கும் மேற்பட்ட உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்த வந்ததாகவும், அவற்றை தாங்கள் மறித்து அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் கிரிமியா பாலம் மீது உக்ரைனின் அதிரடி டிரோன் தாக்குதல்
